வைகாசி மாதம் சுப முகூர்த்த நாட்கள் 2024. பொதுவாக எந்த ஒரு சுப காரியமுமே நல்ல நாள் பார்த்து தான் தொடங்குவார்கள். அது போல், பல சுப நிகழ்வுகளை செய்ய வருகிற மாதத்தில் உள்ள அணைத்து சுப முகூர்த்தங்கள் குறித்த விவரங்களை கீழே காணலாம்.
வைகாசி மாதம் சுப முகூர்த்த நாட்கள் 2024
சுபமூகர்த்த நாட்களில் செய்ய கூடிய நிகழ்வுகள்:
திருமணம் செய்வது, திருமாங்கல்யம் செய்ய கொடுத்தல், சீமந்தம் செய்வது, புதுமனை புகுதல், காதுகுத்து போன்ற அணைத்து விதமான சுப நிகழ்ச்சிகளும் சுபமுகூர்த்த நாளில் நடத்தலாம். இது தவிர்த்து, புது வாகனம் வாங்க அல்லது புது தொழில் தொடங்குவது, புதுமனை கட்ட நிலை வைப்பது, புது வியாபாரம் ஆரம்பிக்க, குழந்தைகளுக்கு முதல் கல்வி ஆரம்பிப்பது மற்றும் பூணல் அணுவித்தல் போன்ற நற்காரியங்களும் சுபமுகூர்த்த தினங்களிலே செய்யப்படும்.
வைகாசி மாத சுப முகூர்த்தங்கள்:
2024 ஆம் ஆண்டு, வைகாசி மாதத்தில் மொத்தம் 7 சுபமுகூர்த்த தினங்கள் உள்ளன.
முதல் சுபமுகூர்த்தம் – 19.05.2024 – வைகாசி 6
கிழமை – ஞாயிற்றுக்கிழமை
முகூர்த்தம் – வளர்பிறை முகூர்த்தம்
லக்கினம் – மிதுன லக்னம்
திதி – ஏகாதசி
நட்சத்திரம் – அஸ்தம்
சுபமுகூர்த்த நல்ல நேரம் – அமிர்த காலை 7.30 – 8.30 மணி
இரண்டாம் சுபமுகூர்த்த நாள் – 26.05.2024, வைகாசி 13
கிழமை – ஞாயிறு
முகூர்த்தம் – தேய்பிறை
லக்கினம் – மிதுனம்
நட்சத்திரம் – மூலம்
திதி – திருதியை
அமிர்த யோகா நல்ல நேரம் – 7.30 – 9 மணி வரை
மூன்றாம் சுபமுகூர்த்த நாள் – 2.06.2024 – வைகாசி 20
கிழமை – ஞாயிறு
முகூர்த்தம் – தேய்பிறை,
யோகம் – அமிர்தம்
லக்னம் – மிதுனம்
நட்சத்திரம் – ரேவதி
திதி – ஏகாதசி
நல்ல நேரம் – 7.30 – 9.00 மணி
வைகாசி விசாகம் 2024 தேதி ! மே 23 வியாழன் கிழமை அன்று விசாகனுக்கு திருவிழா !
நான்காம் சுபமுகூர்த்த நாள் – 03.06.2024 , வைகாசி 21
கிழமை – திங்கள்
முகூர்த்தம் – தேய்பிறை
லக்கினம் – ரிஷப லக்கினம்
நட்சத்திரம் – அஸ்வினி
திதி – துவாதசி
யோகம் – சித்த யோகம்
நல்ல நேரம் – 6.00 முதல் 7.30 மணி வரை
5வது சுபமுகூர்த்த நாள் – 09.06.2024, வைகாசி 27
கிழமை – ஞாயிறு
முகூர்த்தம் – வளர்பிறை
லக்கினம் – மிதுனம்
நட்சத்திரம் – புனர்பூசம்
திதி – திருதியை
யோகம் – சித்த யோகம்
நாள்;ல நேரம் – 7.30 முதல் 9.00 மணி வரை
6ஆம் சுபமுகூர்த்த நாள் – 10.06.2024, வைகாசி 28
கிழமை – திங்கள்
முகூர்த்தம் – வளர்பிறை
லக்னம் – ரிஷபம்
நட்சத்திரம் – பூசம்
திதி – சதுர்த்தி
யோகம் – சித்த யோகம்
நல்ல நேரம் – 9.30 – 10.30 மணி
7வது சுபமுகூர்த்த நாள் – 12.06.2024, வைகாசி 30
கிழமை – புதன்க்கிழமை
முகூர்த்தம் – வளர்பிறை
லக்னம் – கடகம்
நட்சத்திரம் – மகம்
திதி – சஷ்டி
யோகம் – சித்தம்
நல்ல நேரம் – 9.00 – 10.30 மணி
இவ்வாறு சிறப்பாக வைகாசி மாதத்தில் இத்தனை சுபமுகூர்த்த தினங்கள் அமைந்துள்ளன. இதில் அனைத்தும் நல்ல சுப காரியங்கள் நடத்தவும், தொடங்கவும் செய்யலாம். vaikasi matham suba muhurtham dates 2024 tamil calendar 07