தமிழகத்தில் திறந்தவெளி கட்டுமான பணிகளுக்கு கட்டுப்பாடு: தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியதில் இருந்து வரலாறு காணாத அளவுக்கு நாளுக்கு நாள் வெப்பநிலை அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதனால் அரசு மக்களின் வாழ்வினை பேணி காக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் திறந்தவெளி கட்டுமான பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்காக தொழிலக பாதுகாப்பு இயக்கம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” கடந்த சில நாட்களாகவே வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
சூரியன் படு பயங்கரமாக சுட்டெரிக்கும் நிலையில் இரும்பு சம்பந்த துறையில் வேலை பார்க்கும் ஊழியர்கள் அதிகமாக பாதிக்கப்படுகிறரர். குறிப்பாக கடும் வெயிலில் திறந்தவெளி கட்டுமான பணியில் ஈடுபடும் ஊழியர்கள் உடல் நிலை சீராக இல்லாமல் மயக்கம் அடையும் அளவுக்கு கொண்டு செல்கிறது. எனவே பணியாளர்களின் உயிரை காக்கும் விதமாக மே மாதம் முடிவுக்கு வரும் வரை கட்டுமான பணியில் ஈடுபடும் ஊழியர்கள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வேலை பார்க்க கூடாது என்று தொழிலக பாதுகாப்பு இயக்கம் தெரிவித்துள்ளது.
சிவகங்கையில் உயிரிழந்த மகளுக்கு பூப்புனித நீராட்டு விழா – உறவினர்களை நெகிழ வைத்த தாயின் செயல்!
தமிழகத்தில் திறந்தவெளி கட்டுமான பணிகளுக்கு கட்டுப்பாடு