சென்னை காவல் துறை தொடங்கிய ‘பந்தம்’ சேவை திட்டம். தமிழக காவல்துறை சார்பில் பல்வேறு முன்னெடுப்பு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் 75 வயதுக்கு மேற்பட்ட வயதான நபர்களின் தேவைகளுக்கு உதவ சென்னை பெருநகர காவல் துறை சார்பில் பந்தம் என்ற சேவை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை காவல் துறை தொடங்கிய ‘பந்தம்’ சேவை திட்டம்
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
பொதுவாக வீடுகளில் வசிக்கும் 75 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். சில நேரங்களில் வீட்டில் தனியாக இருப்பதால், உற்றார், உறவினர்கள் இல்லாத 75 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் தங்களுக்கு தேவையான மருந்துகள், சட்ட உதவிகள் போன்றவற்றை பெற சிரமப்படுகின்றனர். இது மூத்த குடிமக்களுக்கு சேவை அளிக்க பந்தம் என்ற பெயரில் சென்னை காவல்துறையில் சார்பில் ஒரு புதிய திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
பந்தம் சேவை உதவி எண் :
அந்த வகையில் 75 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் 94999-57575 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவையான உதவிகளை காவல் துறையினர் மூலம் செய்து கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து சென்னை பெருநகர காவல் துறையின் மூலம் சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டு மூத்த குடிமக்கள் மற்றும் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஜூன் 10 முதல் பொது கலந்தய்வு துவக்கம் ! கல்லூரிக் கல்வி இயக்ககம் தகவல் !
இந்நிலையில் சென்னை பெருநகர காவல் துறை சார்பில் தொடங்கப்பட்ட இந்த பந்தம் சேவை திட்டம் 75 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் உற்றார், உறவினர்கள் இல்லாதவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று தெரிவிக்கப்ட்டுள்ளது.