சவுக்கு சங்கர் வழக்கு விவகாரம் – மே 28-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்: யூடியூபர் சவுக்கு சங்கர் சமீபத்தில் பெண் காவல்துறையை தரக்குறைவாக பேசியதற்காக தேனி மாவட்டத்தில் இருக்கும் ஒரு விடுதியில் வைத்து கைது செய்தனர். இதனை தொடர்ந்து நீதிமன்ற காவலில் இருந்து வந்த அவர் மீது அடுக்கடுக்காக புகார்கள் எழுந்த நிலையில், போலீஸ் தீவிரமாக விசாரணை செய்து வந்தது. குறிப்பாக கஞ்சா கடத்தல் வழக்கு போடப்பட்டுள்ள நிலையில் தற்போது அவர் கோவை சிறையில் இருந்து வருகிறார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
மேலும் அங்கு தனக்கு உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று எண்ணி தன்னை மதுரை சிறைக்கு மாற்ற வேண்டும் என்று சவுக்கு சங்கர் மனு அளித்திருந்தார். ஆனால் அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், சவுக்கு சங்கருக்கு மே 28-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையில் இவரை பேட்டி எடுத்த யூடியூபர் பெலிக்ஸ் வீட்டில் காவல்துறை அதிரடி சோதனை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.