தீ பற்றி எரியும் மோட்டார் வாகனங்கள். சமீப காலமாக மோட்டார் இரு சக்கர வாகனங்கள் அதிகளவில் தானாக தீ பற்றி எரிந்து விபத்துக்களை கண்டறியப்பட்டுள்ளன. இது குறித்து போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
மோட்டார் வாகனங்கள் தானாக தீப்பற்றி எரியும் விபத்துகள் பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளபட்ட நிலையில், மோட்டார் வாகனங்களில் முக்கிய பாகங்களை நமது தேவைக்கு மாற்றுவதால் இது போன்ற தீ விபத்துக்கள் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அங்கீகரிக்கப்படாத சி.என்.ஜி மற்றும் எல்.பி.ஜி (CNG / LPG ) மாற்றங்கள் செய்வது, அதற்கான அங்கீகரிக்கப்படாத அல்லது தகுதியில்லாத நிறுவனங்களால் மாற்றம் செய்யப்பட்ட வாகனங்கள் தீ விபத்துக்குள்ளாகின்றன.
வாகனச் சட்ட விதிகளின்படி குற்றம் :
இந்நிலையில் இதுபோன்று அனுமதியின்றி வாகனங்களில் மாற்றம் செய்யப்படுவது மோட்டார் வாகன சட்ட விதிகளின்படி குற்றம் என சாலைப் பாதுகாப்பு ஆணையரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை காவல் துறை தொடங்கிய ‘பந்தம்’ சேவை திட்டம் ! மூத்த குடிமக்களுக்கு உதவியாக இருக்கும் என தகவல் !
மேலும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் உரிய அனுமதியின்றி வாகனங்களில் மாற்றம் செய்யப்படுவது மோட்டார் வாகனச் சட்ட விதிகளின்படி குற்றமாகும் எனவே வாகன உரிமையாளர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.