தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில் கோடை வெயில் பல்ல காட்டி அடித்து கொண்டிருக்கும் நிலையில் வானம் அழுகும் விதமாக ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் ஆனந்த கடலில் மிதந்து வருகின்றன. இப்படி இருக்கும் சூழலில் சென்னை வானிலை மையம் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதால் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்ய கூடும்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
குறிப்பாக தமிழகத்தில் திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் சென்னை பகுதியில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதுமட்டுமின்றி தென்தமிழக கடலோர பகுதிகள், கேரள கடலோரப் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.