கழிவு நீர் அடைப்பை எடுக்க நவீன இயந்திரம் அறிமுகம். தற்போது சென்னை மாநகராட்சி விரிவாக்க பணிகள் செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் அதற்கான அடிப்படை வசதிகளுக்கான பணிகள் இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில் அதிகரித்து வரும் கட்டுமானப்பணிகள் மற்றும் மக்கள் பெருக்கத்தால் கழிவுநீர் பிரச்சினைகள் சென்னை மாநகராட்சியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் இதனை சரி செய்யும் வகையில் சென்னையில் கழிவு நீர் அடைப்பை சரி செய்ய பண்டிகூட் என்ற இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கழிவு நீர் அடைப்பை எடுக்க நவீன இயந்திரம் அறிமுகம்
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
பண்டிகூட் (Bandicoot) இயந்திரம் :
தற்போது வரை இது போன்ற பிரச்சினைகளை கழிவுநீர் ஊர்தி மூலம் குடிநீர் வழங்கல்துறை சரி செய்து வருகிறது. மேலும் சில இடங்களில் பணியாட்கள் கழிவு நீர் தொட்டிக்குள் இறங்கி அடைப்புகளை சரி செய்யும் அவலங்கள் நடந்தேறி வருகின்றன. அத்துடன் இதுபோன்ற சம்பவங்களால் பலர் விஷவாயு தாக்கி இறந்து போகும் சோகமான நிலையம் அரங்கேறி வருகின்றன.
சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை பாதிப்பு ! பயணிகள் கடும் அவதி !
இதற்க்கு நீதிமன்றம் மற்றும் பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பு எழுந்த நிலையில் தற்போது ஓஎன்ஜிசி நிறுவனம், பெருநிறுவன சமூக பொறுப்புநிதியிலிருந்து 3 நவீன அடைப்பு நீக்கும் பண்டிகூட் (Bandicoot) இயந்திரங்களை சென்னை குடிநீர் வாரியத்துக்கு வழங்கியுள்ளது. அந்த வகையில் இயந்திரத்தை கொண்டு தற்போது சென்னை மாநகராட்சி சார்பில் சோதனை பணிகள் நடைபெற்று வருகிறது.