ராஜஸ்தானில் தாமிர சுரங்கத்தில் ஏற்பட்ட திடீர் விபத்து: ராஜஸ்தான் மாநிலத்தின் முக்கிய மாவட்டமான ஜுன்ஜுனு என்ற பகுதியில் தாமிர சுரங்கம் ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு அந்த சுரங்கத்தில் இருக்கும் ஒரு லிப்ட் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விஜிலென்ஸ் அதிகாரிகள் உள்பட 15 பேர் சிக்கிக் கொண்டனர். அதாவது விஜிலென்ஸ் அதிகாரிகள் சுரங்கத்தின் அடிப்பகுதிக்கு சென்று அங்கு ஆய்வு செய்து திரும்பிய போது தான் லிப்ட் கம்பி அறுந்து விழுந்துள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புக்குழுவினர் அங்கு சிக்கி கொண்டிருந்தவர்களை மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி முதல் மந்திரியும் அவர்களை காப்பாற்ற தேவையான நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டார். இந்நிலையில் சுரங்கத்தில் சிக்கி இருந்த 14 விஜிலென்ஸ் அதிகாரிகள் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், ஒருவர் மட்டும் பரிதாபமாக உயிரிழந்து விட்டார் என்று மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ராஜஸ்தானில் தாமிர சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்து