இந்த வார விசேஷங்கள் 2024 மே 14 முதல் 20 வரை. பொதுவாகவே, ஹிந்து மதத்தில் விசேஷங்கள், கோவில் திருவிழாக்கள், சாமி ஊர்வலங்கள், சிறப்பு தரிசனங்கள், பிரதோஷங்கள் என எல்லா மாதத்திலும் பல விசேஷங்கள் இருப்பதுண்டு. அவ்வாறு, 2024ஆம் ஆண்டு மே மாதத்தில் 14 முதல் 20 வரை உள்ள, அதாவது வைகாசி மாதம் முதல் வாரத்தில், வைகாசி 1 முதல் 7 வரை உள்ள விசேஷங்கள் குறித்து பார்ப்போம். festivals in may 2024.
இந்த வார விசேஷங்கள் 2024 மே 14 முதல் 20 வரை
மே 14 2024: வைகாசி 1ஆம் நாள், செவ்வாய் கிழமை, மேல்நோக்கு நாள், அன்று –
சமயபுரம் மாரியம்மன் பஞ்சபிரகார விழா.
திருமோகூர் காளமேகப் பெருமாள் உற்சவம் நடைபேறும்.
சிவகாசி விசுவநாதர் காலை பூச்சப்பரத்திலும், இரவு ரிஷப வாகனத்திலும் பவனி இருக்கும்.
திருவாடானை ஆதிரத்தினேசுவரர் பல்லக்கில் வீதி உலா.
மே 15: வைகாசி 2, புதன்கிழமை, கீழ்நோக்கு நாள் –
அரியக்குடி சீனிவாசப் பெருமாள் உற்சவம் இன்று ஆரம்பம் ஆகும்.
நயினார் கோவில் நாகநாதர் காலை இந்திரா விமானத்திலும், இரவு பூத வாகனத்திலும், பவனி வருவார்.
திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள், காலை சந்திர பிரபையிலும், இரவு சூரிய பிரபையிலும் பிரபையிலும் புறப்படும்.
மே 16: வைகாசி 3, வியாழன்கிழமை, கீழ் நோக்கு நாள்-
காரைக்குடி கொப்புடையமம்ன் தெப்ப உற்சவம், இரவு புஷ்ப்ப பல்லக்கில் புறப்படும்.
காளையார்கோவில் அம்மன் தபசுக் காட்சி அளிக்கும்.
திருமோகூர் காளமேகப் பெருமாள் அனுமன் வாகனத்தில் புறப்பாடு.
ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் தங்க திருப்புளி வாகனத்தில் பவனி.
மே 17: வைகாசி 4, வெள்ளிக்கிழமை, கீழ் நோக்கு நாள், அன்று-
ஆழ்வார் திருநகரியில் ஒன்பது கருட சேவை.
பழனி பாலதண்டாயுதபாணி தங்க மயில் வாகனத்தில் பவனி வருவார்.
மதுரையில் கூடலழகர் பெருமாள் காலை பல்லக்கிலும், இரவு சிம்ம வாகனத்திலும் புறப்படுவார்.
திருப்பத்தூர் திருத்தணி நாதர் திருக்கல்யாணம்.
அரியக்குடியில் உள்ள சீனிவாசப் பெருமாள், அன்று வெள்ளி அனுமன் வாகனத்தில் வீதி உலா வருவார்.
மே 18: வைகாசி 5, சனிக்கிழமை, மேல்நோக்கு நாள் –
வைகாசி மாதம் சுப முகூர்த்த நாட்கள் 2024 ! மே மற்றும் ஜூன் நல்ல நாட்களின் விபரங்கள் !
திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் இரவு தங்க கருட வாகனத்தில் பவனி வருவார்.
நாட்டரசன்கோட்டை அமைந்துள்ள கண்ணுடைய நாயகி அம்மன் கோவிலில், அம்மன் காலை பல்லக்கிலும், இரவு அன்ன வாகனத்திலும் புறப்படுவார்.
மதுரை அச்சம்பத்த்தில் அமைந்துள்ள பாலதண்டாயுதபாணி கோவிலில் பால்குடம் மற்றும் பூக்குழி விழா நடைபெறும். aanmiga thagaval may 2024.
மே 19: வைகாசி 6ஆம் நாள், ஞாயிறு, சமநோக்கு நாள்,
காஞ்சி குமரக்கோட்டை முருகப்பெருமான் ரத உற்சவம்.
திருப்புகழுர் அக்னீசுவரர் வெள்ளி விருட்சப சேவை.
காட்டுபருவூர் ஆதிகேசவப்பெருமாள் கருட வாகனத்தில் வீதி உலா மற்றும்,
சுபமுகூர்த்த நாள்.
மே 20: வைகாசி 7, திங்கள் கிழமை, சமநோக்கு நாள்,
பிரதோஷம்.
அரியக்குடி சீனிவாசப் பெருமாள் திருக்கல்யாணம்.
திருமோகூர் காளமேகப் பெருமாள் பெருமாள் வைர சப்பரத்தில் பவனி.
நாங்குநேரி ராஜாக்கள் மங்கலம் பெருவேம்புடையார் தர்ம சாஸ்தா வருஷாபிஷேகம்.
இது அனைத்துமே வரும் வார சிறப்பு விசேஷங்கள் ஆகும். festivals in may 2024.