சென்னையில் மீண்டும் பயங்கரம் – 6 வயது சிறுவனை கடித்துக் குதறிய நாய்: தமிழகத்தில் நாய்களால் மக்கள் தாக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பாக தெரு நாய்களை விட வீட்டில் செல்லப் பிராணிகளாக வளர்ந்த நாய்களால் தான் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். சமீபத்தில் சென்னையில் உள்ள பிரபல பூங்காவில் 5 வயது சிறுமியை வெளிநாட்டு ரக இரண்டு நாய்கள் கடித்து குதறிய நிலையில் இப்பொழுது வரை மருத்துவமனையில் தீவிரமாக சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் மாநகராட்சி செல்ல பிராணிகளை வளர்ப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வந்தது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இருப்பினும் இது மாதிரியான சம்பவங்கள் அடங்கிய பாடு இல்லை. தற்போது மீண்டும் சென்னையில் ஒரு 6 வயது சிறுவனை ஒரு நாய் கடித்து குதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சென்னை, புளியந்தோப்பில் கே.பி.பார்க் என்ற குடியிருப்பு பகுதியில் நண்பர்களுடன் விளையாடி கொண்டிருந்த 6 வயது சிறுவனை எதிர்பாராத விதமாக அந்த பக்கம் நாய் கடித்துக் குதறியது. இதில் படுகாயம் அடைந்த அந்த சிறுவனை அங்கிருந்தவர்கள் எழும்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தற்போது சிறுவன் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வருகிறான். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி கடற்கரையில் புதிய வகை “விலாங்கு மீன்” கண்டுபிடிப்பு – சாப்பிட உகந்ததா? விஞ்ஞானிகள் ஆய்வு!!
chennai pulianthope 6 year old boy was bitten by dog – சென்னையில் மீண்டும் பயங்கரம் – 6 வயது சிறுவனை கடித்துக் குதறிய நாய்