சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை ! 65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டடம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு !சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை ! 65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டடம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு !

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை. தமிழகத்தின் மிகப்பெரிய அரசு மருத்துவமனையாக திகழ்கிறது. அந்த வகையில் பழமையான இந்த மருத்துவமனையில் அனைத்துவகை நோய்களுக்கும் தரமான மருத்துவ சிகிச்சைகள் இலவசமாக அளிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் படி சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் நரம்பியல் துறைக்காக 65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதிநவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டடம் கட்டப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் நரம்பியல் துறைக்கென்று புதிதாக உருவாக்கப்படும் இந்தக் கட்டிடமானது 1 இலட்சத்து 12 ஆயிரம் சதுர அடியில் நான்கு தளங்கள் 220 படுக்கை வசதிகளோடு உலகத் தரத்தில் பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்ட இந்த கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தக் கட்டடத்தில் தரைத்தளத்தில் நரம்பியல் மருத்துவ புறநோயாளிகள் பிரிவு, நரம்பியல் அறுவை சிகிச்சை புறநோயாளிகள் பிரிவு, கதிரியக்கவியல் பிரிவு , இயன் மருத்துவ பிரிவு போன்ற வசதிகள் இடம்பெறும்.

முதல் மற்றும் இரண்டாம் தளங்களில் பெண்கள் மற்றும் ஆண்களுக்கான பொது வார்டுகள், மூன்றாம்தளத்தில் தீவிர சிகிச்சை பிரிவுகள் போன்ற வசதிகளுடன் இந்த கட்டிடம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை ! முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் !

நான்காம் தளத்தில் நவீன வசதிகள் கொண்ட 6 அறுவை சிகிச்சை அரங்குகள் மற்றும் அறுவை சிகிச்சைக்கு முந்தைய அறை, மீட்பு அறை போன்ற வசதிகள் இடம்பெறும் வகையில் வடிமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *