தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த நாளில் உள்ளூர் விடுமுறை கன்பார்ம்: தமிழகத்தில் தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றாக இருக்கும் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தினசரி ஏராளமான பக்தர்கள் சென்று வருகின்றனர். இதனால் அங்கு சிறப்பு பூஜைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது வைகாசி பிறந்த நிலையில், அக் கோயிலில் வைகாசி விசாக திருவிழா கொண்டாடப்பட இருக்கிறது. எனவே இந்த திருவிழாவில் கலந்து கொள்ள பக்தர்கள் கூட்டம் கூட்டமாக படையெடுப்பார்கள்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது திருச்செந்தூர் முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு வருகிற மே 22ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் இந்த விசேஷ நாளில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருக்கும் பக்தர்கள் கலந்து கொள்ள இருப்பதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் இந்த உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஜூன் 8ம் தேதி பணி நாளாக அறிவித்துள்ளது.
அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட் – 2024 ஜூலை முதல் ஊதிய உயர்வு எவ்வளவு தெரியுமா? வெளியான முக்கிய தகவல்!!!
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க
தமிழ்நாட்டில் 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு !
தூத்துக்குடி குலசேகரப்பட்டினத்தில் விண்வெளி பூங்கா
நாளை முதல் மே 20 வரை ஊட்டிக்கு வருவதை தவிர்க்கலாம்