ஏற்காடு மலர் கண்காட்சி 2024. கோடைவிழாவை முன்னிட்டு தற்போது சேலம் மாவட்டம் ஏற்காட்டில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் தற்போது மலர் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மலர் கண்காட்சியில் 650க்கும் மேற்பட்ட ரோஜா ரகங்கள் மற்றும் சில்வர் லினிங், டேபிஸ் மவுண்டைன் குளோரி போன்ற புதிய வகை மலர் ரகங்கள் காட்சிபடுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்காடு மலர் கண்காட்சி 2024
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
ஏற்காடு மலர் கண்காட்சி :
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் மலர் கண்காட்சி நிறைவு பெரும் நிலையில், கொடைக்கானலில் மலர்கண்காட்சி தொடங்கப்பட்டது. அந்த வகையில் தற்போது சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி வரும் மே 22 ஆம் தேதி தொடங்கி மே 26 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு நடைபெற இருப்பதாக சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி அறிவித்துள்ளார்.
கோவையிலிருந்து ஊட்டிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம் – போக்குவரத்து கழகம் அறிவிப்பு
மேலும் மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலை துறை இனைந்து நடத்தும் கோடை மலர் கண்காட்சியில் ஜினியா, டேலியா, ஆர்கிட், சால்வியா, கானேசன், ஜெர்பெரா, பெகோனியா, டெல்பீனியம், ஸ்னாப் டிராகன் போன்ற அரிய வகை மலர்கள் காட்சிப்படுத்தப்பட இருப்பதாக தகவல் வெளியிகையுள்ளது.