அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள். தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேர்வு முடிவுகள் கடந்த மே 6 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து மாணவர்கள் உயர்கல்வியில் சேர்வதற்கு கல்லூரிகளில் விண்ணப்பபதிவு தொடங்கப்பட்டது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மொத்தம் 1.07 லட்சம் பட்டப்படிப்பு இடங்கள் உள்ளன. இந்த இடங்களை நிரப்புவதற்கான மாணவர் சேர்க்கை கடந்த 6 ஆம் தேதி தொடங்கப்பட்டது.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்
மேலும் உயர்கல்வியை தொடர விரும்பும் ஏழை, எளிய மாணவர்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர ஆர்வமாக விண்ணப்பித்து வருகின்றனர். இதுவரை விண்ணப்பபதிவானது 2 லட்சத்தை கடந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
அரசு கல்லூரிகளில் விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் :
அத்துடன் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு நாளை கடைசி நாளாகும். மேலும் விண்ணப்பிக்க நாளை ஒரு நாள் இருப்பதால் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்கள் விண்ணப்பிக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கு அடுத்த மாதம் 6ஆம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது.
அரசு மருத்துவமனைகளில் இனி 3 ஷிப்ட்களாக பணி ! தமிழக அரசு அறிவிப்பு !
அதனை போல் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கும் விண்ணப்பிக்க அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.
விண்ணப்பிப்பதிற்கான இணையதளம் – www.tngasa.in