Home » செய்திகள் » ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைஸி உயிரிழப்பு – ஈரானின் புதிய அதிபராக முகமது முக்பர் பதவியேற்பு!!

ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைஸி உயிரிழப்பு – ஈரானின் புதிய அதிபராக முகமது முக்பர் பதவியேற்பு!!

ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைஸி உயிரிழப்பு: ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைஸி அஜர்பைஜான்  நாட்டில்  கட்டப்பட்ட  அணை  திறப்பு  விழாவிற்கு  சிறப்பு விருந்தினராக ஹெலிகாப்டரில் சென்றுள்ளார். அப்போது வானிலை மிகவும் மோசமாக இருந்துள்ளது. தொடர்ந்து கனமழை பெய்த காரணத்தால் ஹெலிகாப்டர் கண்ட்ரோலை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் ஹெலிகாப்டர் சுக்குநூறாக நொறுங்கியது. தற்போதைய விபத்துக்களான ஹெலிகாப்டர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இதில் பயணித்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைஸி நிலை குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகாமல் இருந்து வந்த நிலையில், இப்பொழுது அதிர்ச்சி செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, ஹெலிகாப்டர் முழுமையாக எரிந்த நிலையில் இருப்பதால் ஈரான் அதிபர் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என ராய்ட்டர் செய்தி நிறுவனம் தகவலளித்துள்ளது.

ஒரு மாசமா வெங்காயத்தை சாப்பிடாமல் இருந்தால்  என்ன நடக்கும்? மருத்துவர் சொன்ன ஷாக்கிங் தகவல்!

மேலும் அவர் தற்போது உயிரோடு இல்லை என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழந்த நிலையில் துணை அதிபர் முகமது முக்பர் ஈரான் நாட்டின் புதிய அதிபராகிறார். ஈரான் நாட்டின் புதிய காபந்து அதிபராக துணை அதிபர் பொறுப்பேற்க உள்ளார் என்று கூறப்படுகிறது. ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைஸி உயிரிழப்பு – iran new president update 2024

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *