ரயில் நிலையத்தில் நடனமாடி ரீல்ஸ் பதிவிட்ட பெண்கள். தற்போது சமூகவலைத்தளங்களை பயன்படுத்தும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும் ஆபத்தை உணராமல் பல இடங்களில் வீடியோ எடுப்பது மற்றும் ரீல்ஸ் எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருச்சி ரயில் நிலையத்தில் நடனமாடி ரீல்ஸ் பதிவிட்ட பெண்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
நடனமாடி ரீல்ஸ் பதிவிட்ட பெண்கள் மீது நடவடிக்கை :
திருச்சி ரெயில் நிலையத்தில் நடனமாடி ரீல்ஸ் பதிவிட்டதாக 3 பெண்கள் உட்பட நான்கு பேர் மீது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் ரயில் நிலைய படிக்கட்டுகள், சரக்கு ரயில் நிற்கும் நடை பாதைகள் போன்றவற்றில் ஆபத்தை உணராமல் நடனமாடி வீடியோ எடுத்துள்ளனர்.
வீடுகளில் கிளி உள்ளிட்ட பறவைகள் வளர்க்க பதிவு செய்ய வேண்டும் ! மீறினால் 7 ஆண்டுகள் சிறை – தமிழ்நாடு அரசு அறிவிப்பு !
இதனை கண்காணித்து நடவடிக்கை எடுத்த ரயில்வே காவல்துறை மேலும் இனி இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என ரீல்ஸ் செய்த பெண்களை கண்டித்து அனுப்பி வைத்தனர்.