
ஈரான் நாட்டில் அதிபர் தேர்தல் தேதி அறிவிப்பு. நேற்று ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைஸி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த நிலையில் தற்போது ஈரான் நாட்டின் துணை அதிபராக பதவி வகித்து வந்த முகமது மொக்பர் தற்காலிக அதிபராக பதவியேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஈரான் நாட்டில் அதிபர் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் நாட்டில் அதிபர் தேர்தல் தேதி அறிவிப்பு
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
ஈரான் நாட்டில் அதிபர் தேதி அறிவிப்பு :
ஈரான் நாட்டின் அதிபர் இப்ராஹிம் ரைஸி அஜர்பெய்ஜான் பகுதியில் கட்டப்பட்ட அணையின் திறப்பு விழாவை முடித்துவிட்டு ஹெலிகாப்டரில் திரும்பிய போது கனமழை மற்றும் மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் வெடித்து சிதறியதில் அதில் பயணம் செய்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைஸி மற்றும் வெளியுறவு துறை அமைச்சர் உட்பட அதில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்து விட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.
ரயில் நிலையத்தில் நடனமாடி ரீல்ஸ் பதிவிட்ட பெண்கள் – நடவடிக்கை எடுத்த காவல்துறை !
இதனை தொடர்ந்து அந்நாட்டின் துணை அதிபராக இருந்த முகமது மொக்பர் தற்போது தற்காலிக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் ஈரான் நாட்டின் புதிய அதிபரை தேர்ந்தெடுக்கும் வகையில் வரும் ஜூன் மாதம் 28 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.