குற்றாலத்தில் குளிக்க புதிய கட்டுப்பாடு: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வரும் நிலையில், ஆங்காங்கே இருக்கும் நீர் நிலையங்களில் தண்ணீர் வரத்து அதிகமாக இருந்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குறிப்பாக பழைய குற்றாலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் கொள்ளுப் பேரன் அஸ்வின் என்பவர் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இதனால் அப்பகுதியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்தது. கடந்த நான்கு நாட்களாக குளிக்க தடை செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது சுற்றுலா பயணிகளுக்கு குட் நியூஸ் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, பழைய குற்றாலத்தில் காலை 6 மணி முதல், மாலை 5.30 மணி வரை மட்டுமே சுற்றுலா பயணிகள் குளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதனால் சுற்றுலா பயணிகள் சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர். severe rainfall alert – Kutralam Falls / Courtallam Falls, Tenkasi
“காதல் கொண்டேன்” படத்தின் 2nd ஹீரோவை நியாபகம் இருக்கா? அடக்கடவுளே இப்படி ஆயிட்டாரே?
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க
பிரதமர் மோடிக்கு மர்ம நபர்கள் கொலை மிரட்டல்
நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் கொலை வழக்கு
சுற்றுலாப்பயணிகள் தனுஷ்கோடி செல்ல தடை