தமிழ்நாட்டில் கூகுள் நிறுவனம் ஸ்மார்ட் போன் உற்பத்தி. தமிழ்நாடு தற்போது மின்னணு பொருட்கள் உற்பத்தியில் சிறந்து விளங்குகிறது. அந்தவகையில் நாட்டின் 9.56 பில்லியன் மதிப்புள்ள மின்னணு பொருட்களை தமிழகம் ஏற்றுமதி செய்கிறது. இது நாட்டின் மொத்த ஏற்றுமதியில் மூன்றில் ஒரு பங்கு ஆகும். இந்நிலையில் தமிழ்நாட்டில் கூகுள் நிறுவனம் ஸ்மார்ட் போன் உற்பத்தி செய்ய பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
ஸ்மார்ட் போன் உற்பத்தி :
உலகளவில் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் நிறுவனம், தமிழ்நாட்டில் கூகுள் பிக்சல் ஸ்மார்ட் போன்களை உற்பத்தி செய்ய பாக்ஸ்கான் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பாக்ஸ்கான் நிறுவனமானது ஏற்கெனவே தமிழகத்தில் போன்களை உற்பத்தி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
பிஎஸ்சி நர்சிங் மற்றும் பி பார்ம் இன்று முதல் விண்ணப்பப்பதிவு தொடக்கம் – விண்ணப்பிக்க லிங்க் உள்ளே !
இந்நிலையில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா உள்ளிட்டோர் கூகுள் நிறுவன அதிகாரிகளை அமெரிக்காவில் சந்தித்து பேசியுள்ளனர். மேலும் கூகுள் நிறுவனம் தமிழ்நாட்டில் ஸ்மார்ட் போன் தயாரிக்க ஆர்வம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் கூகுள் நிறுவனம் ஸ்மார்ட் போன்களை உற்பத்தியை தொடங்கும்பட்சத்தில் தொழில்நுட்ப துறையில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு போன்றவை உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.