
விஜய் டிவி சீரியல் நடிகை சொன்ன குட் நியூஸ்: தமிழ் சினிமாவை போன்று சின்னத்திரையிலும் உள்ள நட்சத்திரங்களுக்கு ரசிகர்கள் பட்டாளமே இருந்து வருகிறது. அதுமட்டுமின்றி சீரியலில் நடிக்கும் பிரபலங்கள் தொடர்ந்து சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வருவார்கள். அந்த வகையில் காலையில் டி குடிப்பதில் இருந்து இரவு தூங்கும் வரை நடக்கும் நிகழ்ச்சிகளை புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருவார்கள். குறிப்பாக பிரபலங்கள் கர்ப்பமாக இருக்கும் காலகட்டத்தில் புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம்.

அந்த வகையை சில மாதங்களுக்கு முன்பு தான் கர்ப்பமாக இருப்பதாக பதிவிட்டவர் தான் சீரியல் நடிகை ஸ்ரீதேவி அசோக். தற்போது விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் மோதலும் காதலும் மற்றும் பொன்னி உள்ளிட்ட நாடகங்களில் முக்கியமான ரோலில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை ஸ்ரீதேவிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவருக்கு சீரியல் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் ஸ்ரீதேவிக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் டிவி – vijay tv serial actress sridevi
“கிங்” கான் மருத்துவமனையில் அனுமதி – அடக்கடவுளே.. ஷாருக்கானுக்கு என்ன தான் ஆச்சு? பாலிவுட்டில் பரபரப்பு!!
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க
தொழில் பயிற்சி நிலையம் மாணவர் சேர்க்கை 2024
தமிழ்நாட்டில் கூகுள் நிறுவனம் ஸ்மார்ட் போன் உற்பத்தி