தமிழ்நாட்டில் புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகள் அமைக்கும் பணி. தமிழ்நாட்டில் புதிய மருத்துவ கல்லூரிகளை அமைக்க தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. அந்த வகையில் மருத்துவ கல்லூரி அமைப்பது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் கடந்த 6ஆம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி உட்பட அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகள் அமைக்கும் பணி
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
தமிழ்நாட்டில் கூடுதலாக மருத்துவ கல்லூரி :
இந்நிலையில் தமிழகத்தில் மயிலாடுதுறை, திருப்பத்தூர், தென்காசி, பெரம்பலூர், அரக்கோணம், ராணிப்பேட்டை ஆகிய 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக்கல்லூரி அமைக்க தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. மேலும் மத்திய அரசின் பங்களிப்புடன் அமைக்கப்பட உள்ள இந்த மருத்துவக் கல்லூரிகளுக்கான 25 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்யும் படி தமிழ்நாடு அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் மருத்துவக்கல்லூரி அமைக்கும் பணியானது இரண்டு பகுதிகளாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, முதற்கட்டமாக மயிலாடுதுறை, திருப்பத்தூர், தென்காசி ஆகிய இடத்திலும், இரண்டாம் கட்டமாக பெரம்பலூர், அரக்கோணம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களிலும் மருத்துவக்கல்லூரிகளை தமிழ்நாடு அரசு அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குன்னூர் பழக்கண்காட்சி 2024 ! மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் !
அந்த வகையில் தமிழகத்தில் ஏற்கெனவே 38 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ள நிலையில், தற்போது புதிதாக 6 அரசு மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.