தமிழ்நாட்டில் வரும் ஜூன் 6 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்கி மற்றும் ஏப்ரல் மாதத்தில் முடிவடைந்தது. அதன் பிறகு மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றதாலும், கடும் வெயில் நிலவியதால் பள்ளிகள் திறப்பது தாமதாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
தமிழ்நாட்டில் வரும் ஜூன் 6 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்
ஆனால் தற்போது தமிழகத்தில் வெயில் குறைந்து கோடை மழை காரணமாக குளிர்ச்சியான கால நிலை நிலவுவதாலும், அத்துடன் ஜூன் மாதம் 4-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு பள்ளிகள் திறக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
பள்ளிகள் திறக்கும் தேதி அறிவிப்பு :
இதனையடுத்து தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் வரும் ஜூன் 6 ஆம் தேதி திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மகளிர் கிரிக்கெட் அணி தேர்வு 2024 – விண்ணப்பிக்க லிங்க் உள்ளே !
மேலும் 2024-25 ஆம் கல்வியாண்டில் சேரவிருக்கும் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் ஜூன் 6-ந்தேதி திறக்கப்பட உள்ளதால் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.