
அடேங்கப்பா.. 23 வருடமா நிக்காமல் ஒலிக்கும் இசை: இந்த உலகத்தில் பல விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் இன்னும் பெரும்பாலான மக்களுக்கு தெரியாமல் இருந்து வருகிறது. அப்படி அதிசய பொருளை தான் நாம் இந்த தொகுப்பில் காணலாம். நம் எத்தனையோ இசைக்கருவிகளை பார்த்திருக்கிறோம். ஆனால் 25 வருடமாக நிக்காமல் ஒலிக்கும் இசைக்கருவியை பார்த்திருக்கிறீர்களா? அட ஆமாங்க, பிரபல அமெரிக்க இசைக் கலைஞர் “ஜான் கேஜ்” என்பவர் கடந்த 1987 ஆம் ஆண்டு “முடிந்தவரை மெதுவாக” என்ற ஒரு இசைக்கருவியை இயற்றியுள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இந்த கருவியை பார்த்தவுடனே பியானோ போல் இருக்கும். இந்த கருவியில் சில குழாய்கள் இருக்கின்றன. இதில் காற்று பரவினால் இசை தானாக ஒலிக்கும் அளவுக்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த கருவி முதலில் வெறும் 30 நிமிடங்களுக்கு மட்டும் இசை ஒலிக்கும் விதமாக கண்டிபிடிக்கப்பட்டது.
இதையடுத்து கடந்த 1992ம் ஆண்டு ஜான் கேஜ் உயிரிழந்த நிலையில், அவரை மக்களுக்கு நினைவூட்டும் விதமாக அந்த அறக்கட்டளை சேர்ந்தவர்கள் 639 ஆண்டுகள் நிற்காமல் தொடர்ந்து இசைக்கும் வகையில் இந்த இசையை உருவாக்கியுள்ளனர். இந்த கருவி மின்சாரத்தால் இயக்கப்படும். கரண்ட் இல்லாமல் இருக்கும் சமயத்தில் ஜெனரேட்டர் மூலமாக இயக்கப்படுகிறது. மேலும் இந்த கருவி சுமாராக 23 ஆண்டுகளை கடந்தும் இன்று இசை இசைத்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. long lasting musical instrument – Musician – top indian Scientists – latest news
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க
TNPSC குரூப் 2 & குரூப் 2ஏ தேர்வுகளுக்கான பாடத்திட்டம் மாற்றம்
கேரளாவில் வீரியமெடுக்கும் பறவை காய்ச்சல்