பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு இன்றுமுதல் தொடக்கம். தமிழ்நாடு ஆளுநரும், பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ஆர்.என்.ரவி துணைவேந்தர்கள் மாநாட்டை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு (2023) ஜூன் மாதம் இந்த மாநாடு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஆண்டுக்கான துணைவேந்தர்கள் மாநாடானது இன்று தொடங்கி நாளை வரை நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடத்த திட்டமிடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள 48 மத்திய, மாநில மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு இன்றுமுதல் தொடக்கம்
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு :
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாட்டை தலைமை தாங்குகிறார். மேலும் இந்த மாநாட்டின் தொடக்க நிகழ்வில் முதன்மை சிறப்பு விருந்தினராக பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி) தலைவர் ஜெகதீஷ்குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார்.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பட்டப்படிப்பு மாணவர்சேர்க்கை 2024 – கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு !
இந்த மாநாட்டில் ஆராய்ச்சியின் சிறப்பம்சம், நிறுவன மேம்பாடு, தொழில் முனைவோரை ஊக்குவித்தல், ஆசிரியர் உறுப்பினர்களுக்கான திறன் மேம்பாடு மற்றும் உலகளாவிய மனித வளங்களை ஊக்குவித்தல் தொடர்பான விவாதங்கள், விளக்கங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.