
தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படும் 175 சிறப்பு பள்ளிகளுக்கு மதிய உணவு. தமிழ்நாட்டில் தொண்டு நிறுவனங்கள் மூலம் நடத்தப்படும் சிறப்பு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அரசின் சார்பில் மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படும் 175 சிறப்பு பள்ளிகளுக்கு மதிய உணவு
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
175 சிறப்பு பள்ளிகளுக்கு மதிய உணவு :
இதனையடுத்து திமுக அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும் காலை சிற்றுண்டி திட்டத்தையும் கொண்டு வந்தது. இந்த திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு கிச்சடி, பால் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. அதேபோல் மதிய உணவுத் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து மிக்க முட்டை, சிறுதானியம் போன்றவையும் வழங்குகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் தொண்டு நிறுவனங்கள் மூலம் நடத்தப்படும் கிட்டத்தட்ட 175 சிறப்பு பள்ளிகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்றும் வருகின்றனர்.
வரும் ஜூன் மாதம் முதல் இந்த சிறப்பு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அரசு பள்ளி சத்துணவு திட்டத்தின் மூலம் உணவு வழங்குவதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து சுற்றறிக்கையையும் தற்பொழுது வெளியிட்டுள்ளது. இந்த திட்டத்தின் அடிப்படையில் மாணவர்களுக்கு உரிய நேரத்தில் தரமான உணவு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடர் 2024 ! வெஸ்ட் இண்டீஸ் அணியிலிருந்து ஆல் ரவுண்டர் ஜேசன் ஹோல்டர் விலகல் !
மேலும் முறையாக உணவு வழங்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க புதிய ஊழியரை நியமிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் அரசு பள்ளி சத்துணவு மையத்திலிருந்து சிறப்புப்பள்ளி மையங்களுக்கு உணவு அனுப்பி வைக்கப்படும் எனவும், மாணவர்களுக்கான தட்டு, டம்ளர் உள்ளிட்டவற்றை ஏற்பாடு செய்து தர மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.