அடேங்கப்பா – 98 வயசுல ஜிம்னாஸ்டிக்ஸ் செய்து அசத்திய மூதாட்டி: உலகில் பெரும்பாலான மக்கள் கின்னஸ் சாதனை படைக்க வேண்டும் என்று முயற்சி செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஜெர்மனியை சேர்ந்த ஜோஹன்னா குவாஸ் என்ற 98 வயது மூதாட்டி உலக சாதனை படைத்துள்ளார். அதாவது கடந்த 2012-ம் ஆண்டு உலகின் மிக வயதான ஜிம்னாஸ்ட் என்ற கின்னஸ் உலக சாதனையை படைத்தார். அவருக்கு 98 வயதாகியும் ஜிம்னாஸ்டிக்ஸ் செய்து காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இதனை தொடர்ந்து தற்போது ஜோஹன்னா ஃபிட்டாக ஜிம்னாஸ்டிக் செய்வதற்கேற்ப ஃபிலெக்சிபிளாக கடந்த 12 ஆண்டுகளாக தன்னை தயார் செய்து வருகிறார். அதை புகைப்படம் எடுத்து தனது X வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் “என் முகம் பழையதாக இருக்கலாம், ஆனால் என் இதயம் இன்னும் புதிய உற்சாகத்துடன் இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவர் குறித்து தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா “98 வயதிலும் ஜிம்னாஸ்டிக்கில் ஈடுபடும் ஜோஹன்னா குவாஸ் எனது “மன்டே மோட்டிவேஷன்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அவர் 98 வயதிலும் தினமும் பயிற்சி செய்து காய்கறிகளை சாப்பிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. gymnastics news – guinness world records News in Tamil
கேரளாவில் ‘குழிமந்தி பிரியாணி’ சாப்பிட்ட 85 பேருக்கு உடல்நிலை பாதிப்பு – மருத்துவமனையில் தீவிர சிகிச்சை – என்ன நடந்தது?
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க
தவெக கட்சி தலைவர் விஜய்யின் அடுத்த மூவ்
IPL போட்டியில் தொடரும் அதிசயம்
நர்சிங் கல்லூரி மாணவிகள் வாந்தி மயக்கம்
வைகோ திடீரென மருத்துவமனையில் அனுமதி