மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சியமைத்தவுடன் அக்னிபாத் திட்டம் ரத்து செய்யப்படும். தற்போது இந்தியா முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் இதுவரை 6 கட்டங்களாக 486 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் மீதியுள்ள 57 தொகுதிகளுக்கு இறுதிகட்டமான 7ஆம் கட்ட தேர்தல் வரும் ஜூன் 1ம் தேதி நடைபெற உள்ளது.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
ராகுல்காந்தி பிரச்சாரம் :
இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவை 7ஆம் கட்ட தேர்தல் நடைபெற இருப்பதால் பீகார் மாநிலம் பக்தியர்பூரில் போட்டியிடும் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல்காந்தி பிரசாரத்தில் ஈடுபட்டார். பிரச்சாரத்தின் போது அவர் கூறியதாவது,
தற்போது நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றி மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சியமைத்தவுடன் அக்னிபாத் திட்டம் ரத்து செய்யப்படும் என்றும், மேலும் ஜூன் மாதம் முதல் நாடு முழுவதும் உள்ள பெண்களின் வங்கி கணக்குகளில் தலா ரூ. 8,500 செலுத்தப்படும்.
ஐபில் தொடர் சிறப்பாக நடைபெற உதவிய மைதான பணியாளர்களுக்கு பரிசுத்தொகை – பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவிப்பு !
அத்துடன் இந்த திட்டம் ஒவ்வொரு குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கான நிதி நிலையில் மாற்றத்தை கொண்டுவரும் என்று தெரிவித்த ராகுல் காந்தி, ஜூன் 4ஆம் தேதிக்கு பிறகு ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை கேள்வி எழுப்பினால் எனக்கு எதுவும் தெரியாது என்னை கடவுள் அனுப்பினார் என்று பிரதமர் மோடி கூறுவார் என்று பிரச்சாரத்தின் போது தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.