ஜூன் 1ஆம் தேதி இந்தியா கூட்டணி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் - தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு !ஜூன் 1ஆம் தேதி இந்தியா கூட்டணி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் - தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு !

ஜூன் 1ஆம் தேதி இந்தியா கூட்டணி தலைவர்களின் ஆலோசனை கூட்டம். இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் வரும் ஜூன் 1ஆம் தேதி இறுதியாக 7-வது கட்ட வாக்குப்பதிவு 57 தொகுதிகளுக்கு நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் வருகிற 1 ஆம் தேதி இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் ‘இந்தியா’ கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், திமுக., சமாஜ்வாடி, தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, ராஷ்டிரீய லோக்தளம் உள்பட 28 கட்சி தலைவர்களுக்கு கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும் பட்சத்தில் எவ்வாறு ஒருங்கிணைந்து செயல்படுவது என்பது பற்றியும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. மேலும் பிரதமர் வேட்பாளர் தேர்வு பற்றியும் கூட்டத்தில் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் வரும் 1ஆம் தேதி நடைபெற உள்ள இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் டெல்லியில் நடைபெற உள்ள இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் ஜூன் 1ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு விமானம் மூலம் புறப்பட்டு டெல்லி செல்கிறார். டெல்லி செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு ஜூன் 2ஆம் தேதி சென்னை சென்னை திரும்புகிறார்.

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பிரதமர் மோடி பெயரில் விண்ணப்பம் – போலியாக விண்ணப்பங்கள் குவிந்துள்ளதால் தேர்வுக்குழு குழுப்பம் !

மேலும் இதற்கிடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக நிர்வாகிகளுடன் சென்னை அறிவாலயத்தில் ஆலோசனை நடத்த உள்ளார். இதில் இந்தியா கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் பேச வேண்டிய முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்க இருப்பதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *