பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு 2024. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் வரும் ஆகஸ்ட் மாதம் 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் மாநாட்டு நிகழ்வுகளை அறிந்து கொள்ள மற்றும் இந்தியா, வெளிநாடுகளில் இருந்து பங்கேற்போர் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பிக்கவிரும்புவோருக்காக இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் மாநாட்டில் ஆய்வுக்கட்டுரைகளை சமர்பிக்க விரும்புபவர்கள் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு 2024
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு :
தமிழ் கடவுளான முருகப் பெருமானின் பெருமையை, உலகில் உள்ள முருக பக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில், பழநியில் இந்த ஆண்டு ‘அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை’ இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடைபெறவுள்ளது. அதன்படி மாநாட்டு நிகழ்வுகளில் பங்கேற்கவும், ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிக்கவும் தனி இணையதளம் துவங்கப்பட்டுள்ளது. https://www.muthamizhmuruganmaanadu2024.com/ என்ற இணையதளத்தில் கட்டுரைகளை பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடும்ப அட்டைதாரர்கள் மே மாதத்துக்கான பாமாயில் மற்றும் பருப்பை ஜூன் முதல் வாரத்தில் பெற்றுக்கொள்ளலாம் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு !
இதனையடுத்து உலகில் பெரும்பாலான நாடுகளில் திருமுருக வழிபாடு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியா, இலங்கை, மலேசியா, மியான்மர், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, மொரிசியஸ், இங்கிலாந்து, அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, நியூசிலாந்து, தென்னாப்ரிக்கா, கனடா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் முருகப்பெருமான் வழிபாடு தனித்துவம் பெற்ற வழிபாடாகச் சிறந்து விளங்குகிறது. எனவே உலக முருக பக்தர்களையும் சிந்தனையாளர்களையும் ஒருங்கிணைத்து தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை இம்மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.