விவேகானந்தர் பாறை தியான மண்டபத்தில் பிரதமர் மோடி தியானம் - கன்னியாகுமரியில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடு !விவேகானந்தர் பாறை தியான மண்டபத்தில் பிரதமர் மோடி தியானம் - கன்னியாகுமரியில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடு !

விவேகானந்தர் பாறை தியான மண்டபத்தில் பிரதமர் மோடி தியானம். பிரதமர் நரேந்திர மோடி வரும் 30ஆம் தேதி கன்னியாகுமரிக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அன்று மாலையே கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறைக்கு அவர் படகு மூலம் செல்கிறார். அதன் பின்னர் அங்குள்ள தியான மண்டபத்தில் பிரதமர் மோடி அங்கு அமர்ந்து தியானத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விவேகானந்தர் பாறைக்கு செல்லும் பிரதமர் நரேந்திர மோடி 3 நாட்கள் தியானத்திற்குப் பின்னர் ஜூன் 1ஆம் தேதி விவேகானந்தர் பாறை தியான மண்டபத்தில் இருந்து வெளியே வருகிறார். அதன் பின்னர் கன்னியாகுமரியில் இருந்து நேரடியாக டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் வருகையையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அத்துடன் பிரதமர் தியானம் மேற்கொள்ள உள்ள விவேகானந்தர் மண்டபத்தைச் சுற்றி கடலோர பாதுகாப்பு படை ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து கன்னியாகுமரி உள்ள அனைத்து சுற்றுலா பகுதிகளிலும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு 2024 – இந்து சமய அறநிலையத்துறை சிறப்பு ஏற்பாடு !

கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரை வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பிரதமர் மோடியை வரவேற்பதற்கான சிறப்பு ஏற்பாடுகளை தமிழக பாஜகவினர் செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *