Home » செய்திகள் » வைகோவுக்கு இன்று அறுவை சிகிச்சை – கடைசியாக அவர் பேசிய வீடியோ வெளியீடு!

வைகோவுக்கு இன்று அறுவை சிகிச்சை – கடைசியாக அவர் பேசிய வீடியோ வெளியீடு!

வைகோவுக்கு இன்று அறுவை சிகிச்சை - கடைசியாக அவர் பேசிய வீடியோ வெளியீடு!

வைகோவுக்கு இன்று அறுவை சிகிச்சை: மதிமுக கட்சி தலைவர் வைகோ கடந்த சனிக்கிழமை அன்று திருநெல்வேலியில் இருக்கும் அவருடைய வீட்டில் தடுமாறி கீழே விழுந்ததில் தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து அவரை சென்னை அப்போலோ மருத்துவமனையில் வைத்து சிகிச்சை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் தான் நலமுடன் இருப்பதாக கூறி வைகோ ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், ” நான் முழு ஆரோக்கியத்துடன் நலமாக இருக்கிறேன். மக்கள் கவலைப்பட வேண்டாம்.

தமிழகத்திற்கு மேலும் சேவை செய்ய காத்து கொண்டிருக்கின்றனர். விரைவில் வீடு திரும்புவேன் என்று வைகோ கூறியுள்ளார். இந்த வீடியோவை வைகோவின் மகனும் மதிமுக கட்சியின் பொதுச் செயலாளருமான துறை வைகோ தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் இன்று அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற உள்ள நிலையில் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து வைகோ பேசியதால் அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அவர் விரைவில் மீண்டு வர வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் கூறி வருகின்றனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. வைகோவுக்கு இன்று அறுவை சிகிச்சை – vaiko – apollo hospital – mdmk party

கவுண்டமணி நிஜ வாழ்க்கைல இப்படியா? செந்திலே பயப்படுவாரு.., உண்மையை போட்டுடைத்த முக்கிய பிரபலம்!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top