நோட்டு புத்தகங்களின் விலை 20% குறைவு - வியாபாரிகள் தகவல் !நோட்டு புத்தகங்களின் விலை 20% குறைவு - வியாபாரிகள் தகவல் !

நோட்டு புத்தகங்களின் விலை 20% குறைவு. காகிதத்தின் விலை பெருமளவு குறைந்துள்ளதால் இந்த ஆண்டு நோட்டு புத்தகங்களின் விலையும் 20% வரை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியில் 50 க்கும் மேற்பட்ட நோட்டு புத்தகம் தயாரிக்கும் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அந்த வகையில் தமிழகத்தில் இன்னும் பள்ளிகள் திறக்க இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் நோட்டு புத்தகம் தயாரிக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதன் அடிப்படையில் 20 பக்கம் முதல் 320 பக்கங்கள் கொண்ட 120 வகையிலான நோட்டு புத்தகம் பல்வேறு வடிவங்களில் இங்கு தயாரிக்கப்படுகிறது. மேலும் தமிழகத்தில் மொத்த நோட்டு புத்தகம் உற்பத்தியில் சிவகாசியில் இருந்து 30 சதவீதம் உற்பத்தியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் சிவகாசியிலிருந்து புதுச்சேரி, கேரளா போன்ற அண்டை மாநிலங்களுக்கு நோட்டு புத்தகம் தயாரித்து அனுப்பப்படுகின்றது. ஆண்டுதோறும் சிவகாசியில் ரூ.150 கோடி வரை வியாபாரம் நடக்கிறது. கடந்த காலங்களில் நோட்டு புத்தகம் விலை ஏற்றம் அடைந்த நிலையில், தற்போது இந்த ஆண்டு முக்கிய மூலப் பொருளான பேப்பரின் விலை குறைவால் நோட்டு புத்தகம் விலையும் குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்ட கல்லூரியில் சேர வேண்டுமா? அப்ப இந்த Mail வந்துருக்கான்னு பாருங்க? உடனே Reply பண்ணுங்க!!

கடந்த ஆண்டு ஒரு டன் பேப்பரின் விலை ரூ.1.15 லட்சமாக இருந்தது. தற்போது இந்த ஆண்டு ஒரு டன் பேப்பரின் விலை ரூ. 85 ஆயிரமாக குறைந்துள்ளது. இதன் காரணமாக நோட்புக்கின் விலையும் 20 சதவீதம் வரை விலை குறைந்துள்ளது. தற்போது சிவகாசியில் நோட்டு புத்தகம் உற்பத்தி பணியானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில்.மொத்த வியாபாரம் முடிந்த பிறகு பள்ளி, கல்லுாரிகள் திறந்தவுடன் சில்லறை வியாபாரம் தொடங்கப்படும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *