கிணற்றில் சிக்கிய குட்டியானை 10 மணி நேரத்திற்கு பின் மீட்பு: நீலகிரி மாவட்டம் கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக இருந்து வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கிறது. அதாவது உணவு மற்றும் குடிநீர் தேவைக்காக தான் வனவிலங்குகள் ஊருக்குள் உலா வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் யானை கூட்டம் ஒன்று பந்தலூர் கொளப்பள்ளி குறிஞ்சி நகர் பகுதியில் நேற்று இரவு சென்றுள்ளது. அந்த சமயத்தில் ஒரு குட்டி யானை 30 அடி ஆழம் கொண்ட கிணற்றில் தவறி விழுந்தது. இதை மற்ற யானைகள் கூச்சலிட தொடங்கிய நிலையில் அங்கு வாழும் மக்களுக்கு அதிக அச்சத்தை ஏற்படுத்தியது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இதனை தொடர்ந்து காலையில் அங்கு சென்று போய் பொது மக்கள் பார்த்த போது குட்டி யானை இரவு முழுவதும் கஷ்டப்பட்டுள்ளதை வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். உடனே சம்பவ இடத்திற்க்கு வந்த வனத்துறையினர் அங்கிருந்த யானை கூட்டத்தை விரட்டி அடித்து, கிணற்றுக்குள் இருந்த குட்டி யானையை மீட்கும் பணியில் இறங்கினர். கிட்டத்தட்ட 10 மணி போராட்டத்திற்கு பிறகு குட்டி யானையை மீட்பு படையினரை மீட்டு எடுத்தனர். மேலும் அந்த குட்டி யானையை அதன் தாய் யானையுடன் சேர்க்கும் பணியை வனத்துறை தொடங்க இருக்கிறது. அதுமட்டுமின்றி குட்டியானையை மீட்கும் பணியை தாய் யானை புதர் வழியாக நின்று நோட்டமிட்ட காட்சிகளும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
பாஜக வேட்பாளர் கரண் பூஷனின் கார் மோதி சிறுவர்கள் உயிரிழப்பு – போலீஸ் தீவிர விசாரணை!!
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க
மொபைல் ரீசார்ஜ் கட்டணம் உயர்வு
வைகோவுக்கு இன்று அறுவை சிகிச்சை
கேரளாவில் அடுத்த இரண்டு நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட்
சட்ட கல்லூரியில் சேர வேண்டுமா?