கோமா நிலையில் உள்ள கணவரின் சொத்துக்களை விற்க மனைவிக்கு அனுமதி. கோமா நிலையில் மருத்துவ சிகிச்சை பெற்று வரும் உள்ள கணவரின் சொத்துக்களை விற்க மனைவிக்கு அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் உடல் நலக் குறைவு ஏற்பட்டு கோமா நிலையில் உள்ள தனது கணவரின் சொத்துக்களை கையாளும் வகையில் தன்னை பாதுகாவலராக நியமிக்கக் கோரி சென்னையைச் சேர்ந்த சசிகலா என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார்.
கோமா நிலையில் உள்ள கணவரின் சொத்துக்களை விற்க மனைவிக்கு அனுமதி
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு :
இதனையடுத்து இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி அமர்வு இதற்க்கு சட்டத்தில் இடமில்லாத காரணத்தால் பாதுகாவலராக நியமிக்கக் கோரிய மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது எனவும், உரிமையியல் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் எனவும் உத்தரவு பிறப்பித்தார்.
மேலும் இந்த உத்தரவை எதிர்த்து சசிகலா தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் பாலாஜி அடங்கிய அமர்வு, கணவர் கோமா நிலையில் மருத்துவ சிகிச்சை பெற்று வரும் சூழ்நிலையில் சட்டத்தில் எந்த வழிவகையும் இல்லாவிட்டாலும் சட்ட பாதுகாவலர் என்ற முறையில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கலாம் என கேரள உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பைச் சுட்டிக்காட்டி, கணவரின் சொத்துக்களை கையாள மனைவிக்கு முழு அனுமதியளித்து உத்தரவிட்டது.
தூத்துக்குடியில் அமையவுள்ள வின்பாஸ்ட் நிறுவன தொழிற்சாலை – சுற்றுசூழல் அனுமதி கேட்டு விண்ணப்பம் !
மேலும் அந்த உத்தரவில் மருத்துவமனை சிகிச்சைக்கு பல லட்சக்கணக்கான ரூபாய் செலவழித்த பின்னர் வீடு திரும்பிய கணவரை கவனிக்க தனி செவிலியர்களை நியமிக்க வேண்டியிருக்கிறது எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.