நார்வே செஸ் போட்டியில் பிரக்ஞானந்தா வெற்றி - உலகின் முதல்நிலை செஸ் வீரரான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் !நார்வே செஸ் போட்டியில் பிரக்ஞானந்தா வெற்றி - உலகின் முதல்நிலை செஸ் வீரரான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் !

நார்வே செஸ் போட்டியில் பிரக்ஞானந்தா வெற்றி. தமிழகத்தை சேர்ந்த பிரபல செஸ் வீரர் பிரக்ஞானந்தா உலகின் முதல்நிலை செஸ் வீரரான கார்ல்சனை முதல்முறையாக வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

தற்போது நார்வே நாட்டில் செஸ் 2024 போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்ட பிரபல தமிழக செஸ் வீரர் பிரக்ஞானந்தா பல்வேறு சுற்று போட்டிகளில் வென்று இறுதியாக உலகின் செஸ் போட்டிகளில் முதல்நிலை வீரரான நார்வே நாட்டை சேர்ந்த மேக்னஸ் கார்ல்சனை அவரது சொந்த மண்ணிலேயே வீழ்த்தி சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நீதிமன்ற உத்தரவை மீறி கார் ஓட்டிய TTF வாசன் கைது? அப்ப “மஞ்சள் வீரன்” படம் ட்ராப்பா?

அந்த வகையில் நேற்று நடைபெற்ற கிளாசிக்கல் செஸ் போட்டியின் 3வது சுற்றில் பிரக்னாநந்தா வெள்ளைக் காய்களுடன் களமிறங்கிய நிலையில், உலகின் முதல் நிலை செஸ் வீரரான மேக்னஸ் கார்ல்சனை தமிழக வீரரான பிரக்னாநந்தா முதன்முறையாக தோற்கடித்துள்ளார். அத்துடன் உலகின் நம்பர் ஒன் செஸ் வீரரை வீழ்த்திய பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *