SK ரசிகர்களுக்கு குட் நியூஸ்...  சிவகார்த்திகேயன் வீட்டில் புதிதாக உறவு வரப்போகுது? விரைவில் நல்ல செய்தி வருமா?SK ரசிகர்களுக்கு குட் நியூஸ்...  சிவகார்த்திகேயன் வீட்டில் புதிதாக உறவு வரப்போகுது? விரைவில் நல்ல செய்தி வருமா?

SK ரசிகர்களுக்கு குட் நியூஸ்…  சிவகார்த்திகேயன் வீட்டில் புதிதாக உறவு வரப்போகுது?தளபதி விஜய்யை தொடர்ந்து பெண்கள் மற்றும் குழந்தைகள் ரசிகர்களை அதிகம் வைத்திருக்கும் நடிகர் என்றால் அது சிவகார்த்திகேயன் தான். சின்னத்திரையில் தொகுப்பாளராக என்ட்ரி கொடுத்து தனது மிமிக்கிரி திறமை மூலம் மக்களை குலுங்க குலுங்க சிரிக்க வைத்து, இப்பொழுது தமிழ் சினிமாவின் டாப் 5 ஹீரோக்களில் ஒருவராக இருக்கும் அளவுக்கு உயர்ந்துள்ளார். திரையுலகில் இவரின் வளர்ச்சியை பார்த்து பலரும் பொறாமை பட்டு தான் வருகிறார்கள்.

தற்போது இவர் அமரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வருகிற செப்டம்பர் 27ம் தேதி வெளியாக இருக்கிறது. இதனை தொடர்ந்து ஏ. ஆர் முருகதாஸ் படத்தில் நடித்து வரும் நிலையில் சிவா சினிமாவில் நுழைவதற்கு முன்னரே தனது தாய் மாமனின் மகளான ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவரின் வெற்றிக்கு உறுதுணையாக அவருடைய மனைவி தான் இருந்திருக்கிறார் என்று சிவா பலமுறை மேடையில் சொல்லி நாம் கேட்டிருக்கிறோம்.

மேலும் இந்த தம்பதிக்கு ஆராதனா என்ற மகளும், குகன் தாஸ் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் சிவகார்திகேயனின் மனைவி ஆர்த்தி தற்போது மூன்றாவது முறையாக கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். sivakarthikeyan – sk fans – kollywood king – next thalapathy – tamil cinema – amaran movie – box office collection king

உத்தர பிரதேசம் நொய்டாவில் உள்ள  அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து – பதறவைக்கும் வீடியோ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *