விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவக்கம் - குட் பேட் அக்லி திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புக்கு பிறகு அஜித் கலந்து கொள்வதாக தகவல் !விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவக்கம் - குட் பேட் அக்லி திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புக்கு பிறகு அஜித் கலந்து கொள்வதாக தகவல் !

விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவக்கம். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி படப்பிடிப்பு மீண்டும் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் 24 ஆம் தேதி மீண்டும் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது 60% வரை படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் பட்ஜெட் காரணமாக படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

பிரதமர் மோடியின் தியானம் தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டது அல்ல – கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் விளக்கம் !

இதனையடுத்து நடிகர் அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கம் குட் பேட் அக்லி திரைப்படத்தில் இணைந்தார். அந்த வகையில் குட் பேட் அக்லி திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த பிறகு விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பில் அஜித் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *