
விஜய் படத்தில் நடிக்கமாட்டேன் சொல்லி அழுது புலம்பிய ஹீரோயின்: தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் தளபதி விஜய். தற்போது இவர் நடிப்பில் Goat திரைப்படம் உருவாகி வருகிறது. இதையடுத்து தளபதி 69 படத்துடன் விஜய் தமிழ் சினிமாவை விட்டு வெளியேற இருக்கிறார். இதனால் அவருடைய ரசிகர்கள் சோகத்தில் இருந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி விஜய்யுடன் சேர்ந்து படம் நடிக வேண்டும் என்ற எத்தனையோ ஹீரோயின்கள் இருந்து வருகின்றனர். ஆனால் ஒரு ஹீரோயினுக்கு வாய்ப்பு கிடைத்தும்.

உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
நடிக்கமாட்டேன் என்று சொல்லி அழுத நடிகையை பற்றி யாருக்காச்சும் தெரியுமா? அட ஆமாங்க, அந்த நடிகை வேற யாரும் இல்ல, நம்ம பிரியங்கா சோப்ரா தான். இவருக்கு தளபதி நடித்த தமிழன் என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் அப்போது அவர் நடிக்க ஆர்வம் இல்லை என்று அம்மாவிடம் அழுது கெஞ்சியுள்ளார். இருப்பினும் அவர் வற்புறுத்தி நடிக்க வைத்துள்ளார். இப்பொழுது அவர் பாலிவுட்டை தாண்டி ஹாலிவுட் வரை சென்றுள்ளார்.
தமிழில் விஜய் படத்தில் நடித்ததுடன் அவர் வேற எந்த படத்துலயும் நடிக்கவில்லை. தற்போது பாலிவுட் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தையும் பிடித்துள்ளார். இந்நிலையில் நடிகை பிரியங்கா சோப்ராவின் மொத்த சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நடிகை பிரியங்கா சோப்ராவின் சொத்து மதிப்பு ரூ. 620 கோடி என சொல்லப்படுகிறது. மேலும் இவர் ஒரு படத்தில் நடிக்க ரூ. 14 கோடி முதல் ரூ. 40 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க
VJ சித்து மீது பரபரப்பு புகார்