வாக்கு எண்ணிக்கையின் போது தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும். இந்திய நாடாளுமன்ற மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது.
அந்த வகையில் தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி உட்பட மொத்தம் 40 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி முதல் கட்டமாக தேர்தல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இதில் திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்தும், நாம் தமிழர் கட்சி தனித்தும் தேர்தலில் போட்டியிட்டனர்.
வாக்கு எண்ணிக்கையின் போது தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும்
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
வாக்கு எண்ணிக்கை :
தற்போது நடைபெற்ற மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை (செவ்வாய்க்கிழமை) எண்ணப்படுகின்றன.
இதையடுத்து வாக்கு எண்ணிக்கையானது நாளை காலை 8 மணிக்கு அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் தொடங்குகிறது.
அதன் வரிசையில் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு அதன் பிறகு காலை 8.30 மணிக்கு மேல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் தொடங்கப்படும்.
வாக்கு எண்ணிக்கையின் போது தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
அத்துடன் 15 கம்பெனி துணை ராணுவ படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தடையில்லா மின்சாரம் வழங்க அறிவுறுத்தல் :
அந்த வகையில் மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணி நாளை நடைபெற உள்ள நிலையில், வாக்கு எண்ணும் மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவுறுத்தி உள்ளது.
மதுபிரியர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்.. இந்த நாளில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை.. வெளியான முக்கிய அறிவிப்பு!!
அதன் படி நாளை முதல் நாளை மறுநாள் வரை வாக்கு எண்ணும் மையங்களில் 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்குவதை அனைத்து செயற்பொறியாளர்களும் உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றும்,
மேலும் துணை மின் நிலையங்களில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் அதனை உடனடியாக சரிசெய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.