தேர்தல் வாக்குப்பதிவில் வரலாறு படைத்த இந்தியா. தற்போது நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்கு பதிவில் இந்தியா சாதனை படைத்ததாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
தேர்தல் வாக்குப்பதிவில் வரலாறு படைத்த இந்தியா
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
தேர்தல் வாக்குப்பதிவில் சாதனை :
இந்தியாவில் உள்ள 543 நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை தேர்தல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நாளை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கப்படவுள்ளது. அந்த வகையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர்களின் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது,
உலகத்தில் எந்தவொரு நாட்டிலும் இல்லாத வகையில் 64 கோடியே 20 லட்சம் வாக்காளர்கள் தற்போது நடைபெற்ற மக்களவை தேர்தலில் வாக்களித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் உலகத்திலேயே அதிகபட்சமாக 31 கோடியே 20 லட்சம் பெண்கள் இந்தியாவில் வாக்களித்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கையின் போது தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் – தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவுறுத்தல் !
கண்காணிப்பு குழு:
அத்துடன் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் 68,000 கண்காணிப்பு குழுக்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.