பாகிஸ்தானுக்காக வேவு பார்த்த பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் பொறியாளர்: ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்ட நீதிமன்றம்!!பாகிஸ்தானுக்காக வேவு பார்த்த பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் பொறியாளர்: ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்ட நீதிமன்றம்!!

பாகிஸ்தானுக்காக வேவு பார்த்த பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் பொறியாளர்: பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் தொழில்நுட்ப ஆராய்ச்சி பிரிவில் பொறியாளராக பணியாற்றி வந்தவர் தான் நிஷாந்த் அகர்வால். அவர் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கு முக்கியமான தொழில்நுட்ப தகவல்களை வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டு கடந்த 2018ம் ஆண்டு மகாராஷ்டிராவின் உளவுத்துறை மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு படைகள் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில் கைது செய்யப்பட்டார்.

இதனை தொடர்ந்து சிறையில் இருந்து வந்த அவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் நாக்பூர் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந்நிலையில் இன்று இந்த வழக்கு நாக்பூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், நிஷாந்த் அகர்வாலுக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. அதாவது பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்காக வேவு பார்த்தாக கூறி கைது செய்யப்பட்ட பொறியாளர் நிஷாந்த் அகர்வாலுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனையும் 3,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பாகிஸ்தானுக்காக வேவு பார்த்த பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் பொறியாளர் – ex brahmos engineer – pakistan isi – tamilnadu news – india news

இந்திய வீரர் கேதர் ஜாதவ்  எல்லா கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு –  ரசிகர்கள் ஷாக்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *