மாநில அந்தஸ்து பெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. தற்போது நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் தமிழகத்தில் திமுக, காங்கிரஸ் கூட்டணி தமிழகத்தின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி உட்பட 40 தொகுதிகளும் வெற்றி பெற்றுள்ளது. அந்த வகையில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
மாநில அந்தஸ்து பெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
மாநில அந்தஸ்து பெற்ற விசிக :
இதையடுத்து தற்போது நடந்த மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தொகுதிகளில் தனி சின்னமான பானை சின்னத்தில் நின்று வெற்றி பெற்றுள்ளனர். அதன் படி இரண்டு தொகுதிகளில் தனிச்சின்னத்தில் வெற்றி பெற்றதன் மூலம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெறும் வாய்ப்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மக்களவை சபாநாயகர் பதவிக்கு கடும் போட்டி – துணை பிரதமர் பதவியை அளிக்க பாஜக முடிவு !
இது குறித்து பேசிய விசிக கட்சி தலைவர் திருமாவளவன் இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உட்பட அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்துகொள்ளவதாகவும், மேலும் இந்த வெற்றியின் மூலம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 25 ஆண்டு கால கனவு நிறைவேறியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.