பாஜக கூட்டணியில் நீடிக்கிறோம் ! சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சந்திரபாபு நாயுடு !பாஜக கூட்டணியில் நீடிக்கிறோம் ! சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சந்திரபாபு நாயுடு !

பாஜக கூட்டணியில் நீடிக்கிறோம். இந்தியா முழுவதும் உள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகள் நேற்று அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டன. இதில் பாஜக கூட்டணி 295 தொகுதிகளை கைப்பற்றியது. இதன் அடிப்படையில் மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில் கூட்டணி ஆட்சி அமைய உள்ள நிலையில் அதற்கான ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.

தற்போது நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், மத்தியில் ஆட்சி அமைக்க 272 இடங்கள் தேவைப்படுவதன் காரணமாக பாஜக கூட்டணியில் தெலுங்கு தேசம் கட்சி 16 தொகுதிகளையும், ஐக்கிய ஜனதாதளம் கட்சி 12 தொகுதிகளையும் கைப்பற்றின. இதையடுத்து பாஜக கூட்டணி கட்சிகளுடன் சேர்த்து மத்தியில் ஆட்சியமைக்க உரிமைகோர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த வகையில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 234 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. மத்தியில் ஆட்சியமைக்க சந்திரபாபு மற்றும் நிதிஷ் குமார் கட்சிகளின் ஆதரவு தேவை என்பதால் இரு கட்சிகளையும் தங்கள் பக்கம் கொண்டுவர இந்தியா கூட்டணி முயற்சிக்கலாம் என தகவல் வெளியானது.

இதையடுத்து தெலுங்கு தேசம் கட்சி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் உள்ளது என்று அக்கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை சுட்டுக் கொன்றவரின் மகன் வெற்றி – தேர்தல் முடிவுகளில் அதிர்ச்சி!

மேலும் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க இன்று டெல்லி செல்ல உள்ளதாகவும் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். அந்த வகையில் மத்தியில் மீண்டும் பாஜக தலைமையிலான ஆட்சி அமைவது உறுதியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *