AIESL Finance Consultant ஆட்சேர்ப்பு 2024. சொத்துக்கள் வைத்திருக்கும் நிறுவனம் இந்திய அரசால் உருவாக்கப்பட்ட ஒரு நிறுவனமாகும். டெல்லியில் அமைந்துள்ள இந்த நிறுவனத்தில் தற்போது நிதி ஆலோசகர் பதவிக்கான காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் தகுதி, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை போன்ற தகவல்கள் கீழே காணலாம்.
Job Type | Central Government Jobs |
Recruitment | AIESL Recruitment |
Qualification | Bachelor Degree |
Vacancies | 01 |
Interview Date | 21/06/2024 |
AIESL Finance Consultant ஆட்சேர்ப்பு 2024
நிறுவனம்:
AI சொத்துக்கள் வைத்திருக்கும் நிறுவனம்
பணிபுரியும் இடம்:
டெல்லி
காலிப்பணியிடங்கள் விபரம்:
நிதி ஆலோசகர் – 1
(Finance Consultant)
கல்வித்தகுதி:
ICAIஇல் இருந்து தகுதி பெற்ற பட்டய கணக்காளர் அல்லது செலவு மேலாண்மை கணக்காளராக இருக்கவேண்டும்.
அனுபவம்:
விண்ணப்பதாரர்கள் மத்திய/ மாநில அல்லது ஏதேனும் அரசு நிறுவனங்கள் அல்லது தனியார் நிறுவனங்களில் 25 ஆண்டுகள் E-8 அல்லது அதற்கு மேல் நிலை அரசு நிறுவனங்களில், தனியார் நிறுவனமானால் மோது மேலாளர் அல்லது அதற்கும் மேல் உள்ள பதவியில் பணிபுரிந்த நாட்டுபவம் பெற்றிருக்கவேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் அதிகபட்சமாக 63 வயதிற்கு மிகாமல் இருக்கவேண்டும்.
சம்பளம்:
மாதம் ரூ. 1,35,000 சம்பளமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலையின் நோக்கம்:
நிதிநிலை அறிக்கைகள் மற்றும் அறிக்கையிடல் பற்றிய அவ்வப்போது ஆய்வு செய்தல்.
உள் மற்றும் பிற வகை தணிக்கைகளை ஒருங்கிணைத்தல் மற்றும் பதிலளிப்பது.
மாற்றப்பட்ட சொத்துக்களின் பணமாக்குதல் மற்றும் வருமானம் திரட்டுதல் பற்றிய வழிகாட்டுதல்.
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனங்கள் மற்றும் துணை நிறுவனங்களுக்கு இடையேயான பரிவர்த்தனைகளை சரிபார்த்தல்.
திறந்த முதலீட்டு பரிவர்த்தனைகளின் தீர்வு காணுதல்.
நிதி தொடர்பான ஆவணங்களை உருவாக்குதல்/ஆவணப்படுத்துதல் நிகழ்ச்சி நிரல் உருப்படிகள் மற்றும் இயக்குநர்கள் குழுவிற்கு அறிக்கை செய்தல்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதி மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணலில் கலந்துகொள்ளலாம்.
நேர்காணல் விபரம்:
தேதி – 21.06.2024
நேரம் – 2.30 மணி
இடம் :
AI அசெட்ஸ் ஹோல்டிங் லிமிடெட்
2வது தளம்,
AI நிர்வாகம் கட்டிடம்,
சஃப்தர்ஜங் விமான நிலையம்,
புது தில்லி – 110 003.
முக்கிய குறிப்பு:
கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்து, மற்றும் இதர ஆவணங்களுடன் 21.06.2024 நேர்காணல் அன்று 10.30 மணிக்கே அங்கு பதிவு செய்யவேண்டும்.
மேற்குறிப்பிட்டுள்ள நேர்காணலின் அடிப்படையிலே தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Download |
மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.