
மக்களின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறோம். மக்களவை தேர்தல்முடிவுகள் நேற்று வெளியானதை தொடர்ந்து, மத்தியில் பாஜக தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையில் ஆட்சி அமைக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி தோல்வியடைந்ததை தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இது தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது,
மக்களின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறோம்
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
அண்ணாமலை கருத்து :
தற்போது மத்தியில் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் வெற்றி பெற கடுமையாக உழைத்தோம், இருபினும் தமிழகத்திலிருந்து தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் mp க்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்ப இயலவில்லை.
மேலும் தமிழக மக்களின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக் கொள்கிறோம். தமிழகத்தில் பாஜகவுக்கு மக்கள் கொடுத்துள்ள தீர்ப்பு மூலம் இன்னும் கடினமாக உழைக்க வேண்டும் என்பதை புரிந்து கொண்டோம். சில இடங்களில் குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளோம்.
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை 2024 ! தமிழகத்தில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம் !
தான் போட்டியிட்ட கோவை மக்களவைத் தொகுதியில் பணம் கொடுக்காமல் எனக்கு 4 லட்சம் வாக்குகள் கிடைத்துள்ளன. மேலும் தமிழகத்தில் தற்போது பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 2026 ல் பாஜக ஆட்சி என்பதே எங்களது இலக்கு என்றும், வெற்றி பெற்ற திமுக கூட்டணிக்கு வாழ்த்துகள் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.