2024 மக்களவை தேர்தலில் வென்ற 25 வயது இளம் வேட்பாளர்கள்… அதுவும் எந்த தொகுதி தெரியுமா?2024 மக்களவை தேர்தலில் வென்ற 25 வயது இளம் வேட்பாளர்கள்… அதுவும் எந்த தொகுதி தெரியுமா?

2024 மக்களவை தேர்தலில் வென்ற 25 வயது இளம் வேட்பாளர்கள்: 2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், நேற்று அதற்கான முடிவுகள் வெளியானது. தேசிய அளவில் 543 இடங்களில் பாஜக கூட்டணி 293 இடங்களை பெற்றுள்ளது. இதில் பாஜக மட்டும் 240 இடங்களில் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தனித்துவ ஆட்சிக்கு 270 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்பதால், இம்முறை ஆட்சி கூட்டணியில் அமைய இருக்கிறது. அதுமட்டுமின்றி பாஜக தமிழகத்தில் ஒரு டெபாசிட் கூட வாங்கவில்லை.

2024 மக்களவை தேர்தலில் வென்ற 25 வயது இளம் வேட்பாளர்கள்

இந்நிலையில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் வெறும் 25 வயதில் போட்டியிட்டு வெற்றி கனியை ருசித்தவர்கள் குறித்து சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, 2024 மக்களவை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில் JD(U) வேட்பாளர் ஷாம்பவி சவுத்ரி பீகார் சமஷ்டியூர் என்ற தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு வயது 25 என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல், ராஜஸ்தான் பரத்பூர் காங்கிரஸ் வேட்பாளர் சஞ்சனா ஜாதவ் வெற்றியை நிலைநாட்டினார். உத்தரபிரதேசம் கவுசாம்பி என்ற தொகுதியில் போட்டியிட்ட புஷ்பேந்திர சரோஜ் என்பவரும் வெற்றி வாகை சூடியுள்ளார். உத்தரபிரதேசம்  மச்லி ஷாஹர் தொகுதியில் நின்ற பிரியா சரோஜ் வெற்றி பெற்றார். lok sabha election 2024 – tamilnadu election news – india election – parliamentary election news – nda-india-bjp-congress-live-updates

மதுரையை குளிர்வித்த கனமழை? திடீரென மாறிய வானிலை… மழையில் ஆட்டம் போட்ட மதுர மக்கள்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *