விசிக மற்றும் நாம் தமிழருக்கு மாநில அந்தஸ்து. கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஜூன் 1 ஆம் தேதி நிறைவடைந்தது. இதையடுத்து ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அந்த வகையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளை திமுக கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
விசிக மற்றும் நாம் தமிழருக்கு மாநில அந்தஸ்து :
மக்களவை தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணியில் 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றது. அந்த வகையில் நாம் தமிழர் கட்சியானது நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணியின்றி தனித்து போட்டியிட்டு 8 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது.
இதன் காரணமாக விசிக மற்றும் நாம் தமிழர் ஆகிய இரண்டு கட்சிகளும் தேர்தல் ஆணையம் சார்பில் மாநில அந்தஸ்து பெற்ற கட்சிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை – ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தகவல் !
தவெக தலைவர் விஜய் வாழ்த்து :
தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய் தனது எக்ஸ் தள பதிவில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மக்களின் நம்பிக்கையை பெற்று மாநிலக்காட்சிகளாக அங்கீகாரம் பெறும் தகுதியை வென்றெடுத்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் எனது பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.