மத்திய அமைச்சராகிறாரா அண்ணாமலை. மத்தியில் பிரதமர் மோடியின் அமைச்சரவையில் அமைச்சர் பெயர் பட்டியலில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பெயரும் பரிசீலனையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
மோடி தலைமையில் கூட்டணி ஆட்சி :
தற்போது நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 291 இடங்களை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆட்சியமைக்க 271 இடங்கள் தேவை என்ற நிலையில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்க வில்லை. இதையடுத்து சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி மற்றும் நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் பாஜக பிரதமர் மோடி தலைமையில் ஆட்சியமைக்க உள்ளது.
மத்திய அமைச்சராகிறாரா அண்ணாமலை :
அந்த வகையில் தமிழகத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மோடியின் அமைச்சரவையில் இடம் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் பெயர் பட்டியலில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பெயர் பரிசீலனையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பாஜக RCB போல தோற்றுக்கொண்டே இருக்கும் – அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் !
இந்நிலையில் பாஜக கட்சியில் ஒருவருக்கு ஒரு பதவி என்ற விதி இருப்பதால் மத்திய அமைச்சர் பதவியில் இருந்து கொண்டு மாநில தலைவர் பொறுப்பில் தொடர வாய்ப்பு குறைவு. அந்த வகையில் அண்ணாமலை மத்திய அமைச்சரானால் தமிழக பாஜக தலைவரை மாற்றுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.