ஐந்தே நாட்களில் சந்திரபாபு நாயுடுவின் மனைவி சொத்து மதிப்பு 584 கோடி உயர்வு. தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு மனைவி புவனேஸ்வரியின் சொத்துமதிப்பு ஐந்து நாட்களில் 584 கோடி அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐந்தே நாட்களில் சந்திரபாபு நாயுடுவின் மனைவி சொத்து மதிப்பு 584 கோடி உயர்வு
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு :
ஆந்திரா மாநிலத்திற்கு தற்போது நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதில் ஆளும் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி, பாஜக மற்றும் பவன் கல்யாணின் ஜன சேனா போன்ற கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன.
இந்த தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி அதிக எண்ணிக்கையிலான இடங்களை பெற்று வெற்றி பெற்றது.
அந்த வகையில் வரும் 12 ஆம் தேதி சந்திரபாபு நாயுடு ஆந்திர முதல்வராக பதவியேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சந்திரபாபு நாயுடு மனைவியின் சொத்துமதிப்பு உயர்வு :
இந்நிலையில் ஹெரிட்டேஜ் புட்ஸ் நிறுவனத்தின் பங்குகளின் விலை உயர்வால் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவின் மனைவி நர புவனேஸ்வரியின் சொத்து மதிப்பு ஐந்தே நாட்களில் 584 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.
ஹெரிட்டேஜ் புட்ஸ் பங்கு விலை உயர்வு :
பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை விற்பனை செய்து வரும் அந்த நிறுவனத்தில் புவனேஸ்வரி வசம் 24 சதவீதம் என்ற அடிப்படையில் 2 கோடியே 26 லட்சம் பங்குகள் உள்ளதாக தெரிகிறது.
அந்த வகையில் கடந்த 31 ஆம் தேதி 402 ரூபாயாக இருந்த ஹெரிட்டேஜ் புட்ஸ் பங்கு ஒன்றின் விலை,
ஆந்திர சட்டமன்ற தேர்தல் முடிவின் எதிரொலியாக ஐந்தே நாட்களில் 50 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்து 661 ரூபாய் என்ற புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி – தமிழ்நாடு அரசு அறிவிப்பு !
இதன்காரணமாக சந்திரபாபு நாயுடுவின் மனைவி சொத்துமதிப்பு 584 கோடி அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.