இது கல்யாண சீசன் டோய் .. அடுத்தடுத்து திருமணமாக போகும் சினிமா நட்சத்திர ஜோடிகள்!இது கல்யாண சீசன் டோய் .. அடுத்தடுத்து திருமணமாக போகும் சினிமா நட்சத்திர ஜோடிகள்!

இது கல்யாண சீசன் டோய் .. அடுத்தடுத்து திருமணமாக போகும் சினிமா நட்சத்திர ஜோடிகள்! தென்னிந்திய தமிழ் சினிமாவில் மக்களுக்கு மிகவும் பரிச்சயமான முகங்களுக்கு அடுத்தடுத்து திருமணம் நடைபெற இருக்கிறது. இதனால் திரைத்துறையில் கல்யாணம் கொண்டாட்டமாக இருந்து வருகிறது. அந்த லிஸ்டில் முதலாவதாக கல்யாணம் நடக்க போவது யாருக்கு தெரியுமா? அட வேற யாரு ? நம்மள முரட்டு சிங்கிள் என்று பல வருடங்களாக கல்யாணமே பண்ணாம சுற்றி வந்தாரே நம்ம பிரேம்ஜிக்கு தான் கல்யாணமே?

தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலமாக இருந்து வரும் கங்கை அமரனின் 2வது மகன் தான் பிரேம்ஜி அமரன். அவருடைய அண்ணன் வெங்கட் பிரபுவுக்கு திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ளன. இப்ப வரைக்கும் பிரேம்ஜி ஏன் பேச்சுலராகவே இருக்கிறார் என்று கேள்விகளும், எப்போ தான் கல்யாணம் ஆகும் என்று ஏராளமான ரசிகர்கள் விமர்சனங்களை முன்வைத்து வந்தனர். இந்நிலையில் இன்று (ஜூன் 9) பேச்சுலர் LIfe-யை முழுக்கு போடும் விதமாக பிரேம்ஜிக்கு திருத்தணி முருகன் கோயிலில் கோலாகலமாக திருமணம் நடைபெற்று முடிந்தது. இதில் உற்ற உறவினர்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள் என்று ஏற்கனவே வெங்கட் பிரபு தெரிவித்திருந்தது.

ஆக்சன் கிங் அர்ஜுன் மூத்த மகளான ஐஸ்வர்யாவுக்கும், பிரபல நடிகர் தம்பி ராமையாவின் மகனான உமாபதிக்கும் ஏற்கனவே நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்த நிலையில், வரும் ஜூன் 10ம் தேதி இருவருக்கும் திருமணம் நடைபெற இருக்கிறது. இதில் சினிமா பிரபலங்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் முதல் தாரத்து மகளான வரலட்சுமிக்கும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்ற நிகோலய் சச்தேவுடன் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்தது. இதனை தொடர்ந்து அவர்களுக்கு ஜூலை 2ம் தேதி நடைபெற இருக்கிறது.

இது கல்யாண சீசன் டோய் .. அடுத்தடுத்து திருமணமாக போகும் சினிமா நட்சத்திர ஜோடிகள்!

நடிகர் சித்தார்த் நடிகை அதிதி ராவ் ஹைதாரி யுடன் பல வருடங்களாக லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்தனர். இதனை தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் இருவரும் தெலுங்கானாவில் உள்ள ஒரு கோவிலில் ரகசியமாக நிச்சயதார்த்தத்தை முடித்து கொண்டனர். வருகிற டிசம்பர் மாதம் திரையுலகை சேர்ந்த அனைவரும் கலந்து கொள்ளும் வகையில் பிரமாண்டமாக திருமணம் நடைபெற உள்ளது. Tamil cinema actors – kollywood cinema actress

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *